என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி அருகே பழுதான சாலையை சரி செய்ய வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை
    X

    பழுதான சாலையை படத்தில் காணலாம்

    உடன்குடி அருகே பழுதான சாலையை சரி செய்ய வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

    • தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பழுதாகி உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரியபள்ளம் ஏற்பட்டு உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்என்றும், சாலையோர பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என்றும், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×