search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில் உழவாரப்பணி
    X

    கோவிலில் உள்ள விளக்குகள், பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.

    கோவில்களில் உழவாரப்பணி

    • கோவில் வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றினர்.
    • ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் கோவில் மற்றும் பேட்டையில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது.

    அறநிலையத்துறையின் அனுமதியுடன் கரூர் பகுதியை சேர்ந்த 90 பெண்கள், 40 ஆண்கள் என 130 தன்னார்வலர்கள் கனகராஜ் தலைமையில் பல்வேறு உபகரணங்களுடன் வந்து 2 குழுக்களாக பிரிந்து கோவிலூர் கோவில் மற்றும் பேட்டை கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடிமரம், ராஜகோபுரம், மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி, வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்றினர்.

    மேலும், கோவிலில் இருந்த விளக்குகள், பாத்திரங்கள், கோவில் மணி உள்பட அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-

    நாங்கள் சுமார் 8 ஆண்டு களுக்கு மேல் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாதம் 2 பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கோவிலை தூய்மைப்படுத்தி வருகிறோம்.

    இது எங்களுக்கு முழு மன திருப்தியை தருகிறது. மேலும், ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது. கூலி தொழிலாளர்கள் முதல் அரசு வேலைக்கு செல்பவர்கள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி ஒன்றாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×