என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடி அருகே சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசனின் மகன் நித்தீஷ் (வயது 4). பிரிகேஜி படித்து வந்த அவன் கடந்த 23-ந் தேதி வீட்டின் கழிவறையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் பழிவாங்கும் வகையில் நித்தீஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலைக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் பரமேஸ்வரி (19) க்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருள்ராஜ் என்ற வாலிபரை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்தேன். இதை அறிந்த பெற்றோர் எனது தாய்மாமனான ராமருக்கு திருமணம் செய்து வைத்தனர். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் என் கணவர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அருள்ராஜூடன் நெருங்கி பழகிவந்தேன்.

    ஒருநாள் அருள்ராஜ் என்னுடன் தங்கியிருந்தபோது சிறுவன் நித்தீசின் தந்தை முருகேசன் பார்த்து விட்டார். அவர் ஆத்திரமடைந்து அருள்ராஜை தாக்கி விரட்டினார். என்கனவர் ராமருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவித்தார். இதனால் கோபமடைந்து ஊருக்கு வந்த என் கணவர் என்னை தாக்கினார்.

    எனவே ஆத்திரமடைந்த நான் முருகேசனை பழிவாங்க சிறுவன் நித்தீசை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதையடுத்து பரமேஷ்வரியை போலீசார் கைது செய்தனர். பரமேஸ்வரியின் கள்ளக்காதலன் அருள்ராஜூக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தினர். சென்னையில் இருந்து அவரை ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். சிறுவன் நித்தீஷ் கொலை செய்யப்பட்ட அன்று அருள்ராஜ் சென்னையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அருள்ராஜை போலீசார் விடுவித்தனர்.

    கைது செய்யப்பட்ட பரமேஸ்வரியை திட்டக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பரமேஸ்வரி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரமேஸ்வரிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. தாய் சிறைக்கு சென்றுவிட்டதால் அந்த குழந்தை தவித்தது.

    போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது பரமேஸ்வரி தனது குழந்தையை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார். தற்போது அந்த குழந்தை பரமேஸ்வரியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சிறுவன் கொலையில் 3 நாட்களில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். தனிப்படை பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், சுதாகர், போலீசார் தனபால், தனஜெயன், கருப்பையா, பாலு, மணிகண்டன், காந்தி ஆகியோருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஊக்கப்பரிசு வழங்கினார்.

    திட்டக்குடி அருகே கழுத்தை அறுத்து சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதல் ஜோடி சிக்கியிருப்பது அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் சக்தி பரமேஸ்வரி, சங்கரேஸ்வரி, மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே கன்னியாமூரில் உள்ள பள்ளியில் நித்தீஷ் பிரிகேஜி படித்து வந்தான்.

    தினமும் அவன் பள்ளிக்கு வேனில் சென்று வந்தான். கடந்த 23-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பினான். வீட்டு முன்பு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். இரவு 8 மணி ஆன பின்பும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறை பக்கம் சென்று தேடியபோது அங்கு ரத்த துளிகள் சிதறி கிடந்ததை பார்த்தனர்.

    கழிவறை கதவு திறக்கப்பட்டிருந்தது. அங்கு ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நித்தீஷ் பிணத்தை அவனது தந்தை வீட்டிற்குள் எடுத்து வந்தார். போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகாள் நடந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கிராம நத்தம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது நித்தீஷ் பிணமாக கிடந்த கழிவறையை மோப்பம் பிடித்து விட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு ஓடியது. அந்த வீட்டில் கிடந்த துண்டை கவ்வியது.

    பின்னர் அங்கிருந்து வெளியே ஓடிவந்து முருகேசனை கவ்விப்பிடித்தது. இதனால் முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நித்தீஷ் பிணத்தை கழிவறையில் இருந்து வீட்டிற்குள் எடுத்து வந்ததால் மோப்ப நாய் தன்னை கவ்வி பிடித்தது என்று தெரிவித்தார்.

    மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் முருகேசனுக்கு 2 மகள்கள் பிறந்த பின்னரே நித்தீஷ் பிறந்தான். இதனால் அவன் மீது முருகேசன் அதிகம் பாசமாக இருந்தார் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என போலீசார் முடிவு செய்தனர். பின்னர் இந்த கொலைக்கு சொத்து தகராறு காரணமா? முன்விரோதம் காரணமா? என்று விசாரித்தனர். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பின்னர் கள்ளக்காதல் பிரச்சினையில் நித்தீஷ் கொலை செய்யப்பட்டானா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ரமேஷ்பாபு, சுதாகர், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில விசாரணை நடத்தினர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    முருகேசன் வீட்டின் அருகே ராமர்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(19). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. ராமர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    ராமர் வெளிநாட்டில் இருந்த போது கள்ளக்குறிச்சி கூகையூரைச் சேர்ந்த அருள்ராஜ்(20) என்பவருக்கும், பரமேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நெருங்கி பழகி வந்தனர். இவர்களது கள்ளக்காதல் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

    இந்தநிலையில் ராமர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அதனால் கள்ளக்காதலனை பரமேஸ்வரி சந்திக்க முடியவில்லை. கணவர் ஊருக்கு சென்ற பின்பு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்தார்.

    இருவரும் தனிமையில் இருந்தனர். தற்செயலாக இதைப்பார்த்த முருகேசன் அவர்களை கண்டித்தார். இதனால் பரமேஸ்வரி அச்சத்தில் இருந்து வந்தார். முருகேசனை பழிவாங்க அவரது மகனை தீர்த்துகட்ட பரமேஸ்வரி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மாலை பரமேஸ்வரி வீட்டில் நித்தீஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் டி.வி. பார்த்து கொண்டிருந்தான். திடீரென்று அவன் வீட்டில் இருந்து வெளியே வந்தான். இந்தநேரத்தில் நித்தீசை பரமேஸ்வரி கழுத்தை அறுத்து கொன்று பிணத்தை கழிவறையில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது தெரிந்தது.

    இதையடுத்து பரமேஸ்வரியை இன்று காலை போலீசார் பிடித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இந்த கொலைக்கு கள்ளக்காதலன் உடந்தையாக இருந்தானா? என்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கள்ளக்காதலன் அருள்ராஜையும் பிடித்து வந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதல் ஜோடி சிக்கியிருப்பது அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் விஜயகாந்த் பிறந்த தின விழா வறுமை ஒழிப்பு தினமாக நெய்வேலி கெங்கை கொண்டான் பேரூர் தே.மு.தி.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

    நெய்வேலி:

    தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் விஜயகாந்த் பிறந்த தின விழா வறுமை ஒழிப்பு தினமாக நெய்வேலி கெங்கை கொண்டான் பேரூர் தே.மு.தி.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

    நகர செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி எழிலரசன், தலைமைக்கழகப் பேச்சாளர் தென்னவன், துரை, மகாதேவன், பேரூர் தலைவர் அழகுவேல், பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயப்பிரியா, ஜெயசங்கர் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

    ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது

    நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் முத்துக்குமார், தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் சுரேஷ், பாலு திருமால், சம்பத், ஜெகஜீவன் ராம், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூர் தலைவர் அழகுவேல் நன்றி கூறினார்.

    கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை செய்யப்பட்ட குறித்து போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும் சிறுவன் கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசன். இவரது மனைவி சங்கீதா.இவர்களது மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே உள்ள பள்ளியில் நித்தீஷ் பிரிகேஜி படித்து வந்தான்.

    பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய நித்தீஷ் வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவன் மாயமானான். பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர்.

    அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

    சிறுவன் பிணத்தை முருகேசன் வீட்டிற்குள் தூக்கிவந்தார். போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    முருகேசனிடம் அதிரடி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறுவன் பிணமாக கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. அங்கு நின்று கொண்டிருந்த முருகேசனை கவ்விப்பிடித்தது.

    இதனால் முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் துருவி துருவி விசாரித்தனர். சிறுவனின் பிணத்தை தூக்கி வந்ததால் மோப்ப நாய் தன்னை கவ்விப் பிடித்ததாக முருகேசன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது மகன் மீது முருகேசன் அதிக பாசமாக இருந்தது தெரியவந்தது. எனவே முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

    இதையடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு சொத்து பிரச்சினை காரணமா? முன்விரோதம் காரணமா? முருகேசனை பழிவாங்க யாராவது அவரது மகனை கொன்றுவிட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று மதியம் சித்தேரி கிராமத்திற்கு வந்தார். நித்தீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த கழிவறை மற்றும் அதைச்சுற்றியுள்ள முள்புதர் பகுதியை பார்வையிட்டார்.

    பின்னர் போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடித்து ஓடிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். நித்தீசின் தந்தை முருகேசன், தாய் சங்கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

    நித்தீசின் சகோதரிகள் சக்திபரமேஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோரிடம் நித்தீஷ் பள்ளி முடிந்து வந்தவுடன் எங்கு செல்வான், யாருடன் விளையாடுவான், அவன் யாருடன் நெருங்கி பழகுவான் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளித்தனர்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சிறுவன் கொலை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா என்று கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    சிறுவன் கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ரமேஷ்பாபு, சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    சிறுவனை 2 பேர் சேர்ந்து கொன்று இருக்கலாம் என்று கருதுகின்றனர். கொலையாளிகள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தனிப்படை போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சிறுவன் நித்தீஷ் கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால் சித்தேரி பகுதியில் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வந்ததும் தங்களது குழந்தைகளை வெளியே விளையாட செல்ல வேண்டாம் என்று கூறுகின்றனர்.

    இரவு நேரத்தில் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சைகோ கொலையாளி சிறுவனை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்.

    எனவே அந்த கொலையாளியால் தங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தகொலை சம்பவத்தால் திட்டக்குடி ராமநத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சிதம்பரம் அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று 3 மாவட்டங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள விளாந்திரைமேடு பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே முள்புதருக்குள் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இறந்து கிடந்த பெண் ஊதா மற்றும் வெள்ளை நிற புடவை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. மர்ம மனிதர்கள் அவரை கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு தலைமை யில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்ராஜ் இளவரசன் ஆகியோர் இடம்பெற்றனர். பெண் பிணமாக கிடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.

    எனவே கொலை செய்யப்பட்ட பெண் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே அந்த பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என்று விசாரித்தனர்.

    மேலும் அரியலுர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 1 வாரத்தில் காணாமல் போன பெண்கள் யார்? யார் என்ற பட்டியலை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    விளாந்திரைமேடு பகுதியை சுற்றியுள்ள இடங்களில் உள்ளவர்களிடமும் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    திட்டக்குடி அருகே சிறுவனை கழுத்தை அறுத்து கொன்றது கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாமோ என்று போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகிறார்கள்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர் களுடைய மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே உள்ள கன்னியா மூரில் பிரிகேஜி படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நித்தீஷ் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

    இரவு 8 மணிவரையிலும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உற வினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடினர்.

    அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறை அருகே ரத்ததுளிகள் சிதறிக் கிடப்பதை பார்த்தனர். கழிவறையின் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக் கப்பட்டிருந்தது.

    உடனே முருகேசன் நித்தீசின் உடலை வீட்டிற் குள் தூக்கி வந்தார். போலீசுக்கு தகவல் தெரி விக்காமல் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சிறுவனை கொன்ற கொலையாளி யார்? அவனை எதற்காக கொலை செய்தனர். என்று போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கு நடத்த முயற்சி செய்தது ஏன்? என்று முருகேசன் மற்றும் சங்கீதா விடம் போலீசார் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

    எனவே இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தனித் தனியாக விசாரணை நடத்தினர்.

    கணவன்-மனைவிக்குள் தகராறு ஏதும் உண்டா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தங்களுக்குள் எந்த தகராறும் இல்லை என்று கூறினர்.

    பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வர வழைக்கப்பட்டது. நித்தீசின் தந்தை முருகேசனும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

    நித்தீஷ் பிணமாக கிடந்த கழிவறையை மோப்பம் பிடித்த மோப்ப நாய் வீட்டிற்குள் ஓடியது.

    பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு கிடந்த துண்டை கவ்வியது. அதைத் தொடர்ந்து வெளியே ஓடிவந்து முருகேசனை கவ்விப்பிடித்தது.

    இதனால் இந்த கொலையில் முருகேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    எனவே அவரை மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் நித்தீஷ் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த என் மகனை வீட்டிற்குள் தூக்கி வந்ததால் தான் மோப்ப நாய் என்னை கவ்விப்பிடித்தது என்றார்.

    கொலைகுறித்து முருகேசன் உறவினரிடம் விசாரித்தபோது முருகேச னுக்கு பரமேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு நித்தீஷ் பிறந்தான். அவன் மீது முருகேசன் அதிக பாசமாக இருந்தார் என்று கூறினர்.

    எனவே முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதினர். அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத் தில் இருந்து விடுவித்தனர்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்று விசாரித்தனர். அப்போது முருகேசன் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்தவித தகராறும் இருந்ததாக தெரியவில்லை.

    சிறுவன் நித்தீஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலையில் நண்பர்களுடன் விளை யாடி விட்டு அருகில் உள்ளவர்களின் வீட்டிற்கு சென்று நண்பர்களோடு டி.வி.பார்த்துள்ளான். அங்கிருந்து வெளியே வந்தபிறகு தான் கொலை செய்யப்பட்டுள்ளான்.

    எனவே அந்த வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித் தனர். அதிலும் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. சிறுவன் நித்தீசை நரபலி கும்பல் கொலை செய்து கழிவறையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று தகவல் பரவியது.

    நரபலி கொடுத்திருந்தால் அந்த இடத்தில் சந்தனம், குங்குமம் போன்ற பூஜைப் பொருட்கள் கிடக்கும். ஆனால் நித்தீஷ் பிணமாக கிடந்த இடத்தில் எந்த பொருளும் இல்லை.

    எனவே அவன் நரபலி கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

    நித்தீஷ் வீட்டின் அருகில் உள்ள கழிவறை பயன்படுத்தப்படாமலே உள்ளது. அதை சுற்றி கருவேல மரங்கள் உள்ளன.

    எனவே அந்த கழிவறைக் குள் புகுந்த கள்ளக்காதல் ஜோடியை சிறுவன் நித்தீஷ் பார்த்துவிட்டதால் வெளியே சொல்லிவிடு வான் என்று நினைத்து அவர்கள் நித்தீசை கொன்று பிளேடால் கழுத்தை அறுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையொட்டி கொலை யாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. துணைபோலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ் பெக்டர்கள் ராஜாராம், சுதாகர் ஆகியோர் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.

    கொலையாளிகளை அவர்கள் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 8-ந் தேதி மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம்:

    சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 8-ந் தேதி மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே போலீசார் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்தகொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்ததா? சின்ன சேலத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடையில் நடந்ததா, சென்னையில் ரெயில் நின்ற இடத்தில் நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அந்த பட்டியலை சேகரித்து விசாரித்தனர். 18 நாட்கள் ஆகியும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று துப்பு துலங்கவில்லை.

    இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு ரெயில் மெதுவாக வரவாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும். அங்கு என்ஜீன் மாற்றப்பட்டு பின்னர் புறப்பட்டு செல்லும் அந்த நேரத்தில் இந்த கொள்ளை நடத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இதையொட்டி சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையில் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் கடந்த 15-ந் தேதி முதல் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ரெயில் நின்ற இடம், ரெயில் என்ஜின் நின்ற இடம் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு யார் யார்? அதிகமாக செல்போன் பேசியிருக்கிறார்கள். என்று போலீசார் விசாரித்தனர்.

    மேலும் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநில வாலிபர்கள் லாட்ஜுகளில் தங்கி இருந்தார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    விருத்தாசலத்தில் இருந்து சின்னசேலம் வரை ரெயில் தண்டவாளம் அருகே தடயங்கள் ஏதும் சிக்குகிறதா? என்று பார்வையிட்டனர். ஆனால் எந்த வித தடயங்களும் சிக்கவில்லை.

    இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கூடுதலாக விசாரிக்கும்படி கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    விருத்தாசலம் அருகே மு.பரூர் மற்றும் சின்னசேலம் கொரக்கவாடி, கெங்கராம் பாளையம், கூத்தக்குடி ஆகிய பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் நடமாடுகிறார்களா? என்று பொதுமக்களிடம் விசாரித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பாலம் கட்டும் பணி, ரோடு போடும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அந்த பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா? என்று கேட்டறிந்தனர். அந்தபகுதியில் உள்ள ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் விசாரித்தனர்.

    ரெயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த சம்பவம் முதல்முறையாக நடந்துள்ளது. மிக நுணுக்கமான முறையில் இந்த கொள்ளை சம்பவம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே உள்ளூர் கொள்ளையர்கள் இந்த முறையில் கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்று கருகிறார்கள்.

    வடமாநிலத்தில் உள்ள கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.

    நக்சலைட்டுகளின் தூண்டுதலின் பேரிலேயே வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடமாநிலத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் உள்ள இளைஞர்களை நக்சலைட்டுகள் அழைத்து சென்று அவர்களுக்கு சாதகமாக பேசுகிறார்கள். பெரிய அளவில் கொள்ளை அடித்துக்கொண்டு பணத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். அந்த இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பாலம் கட்டும் பணி மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    நகைக்கடை, வங்கிகள் ஆகியவைகளை நோட்டமிடுகின்றனர். சுவரில் துளைபோட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் நக்சலைட்டுகள் சம்பளம் கொடுக்கிறார்கள்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுவரில் துளைபோட்டு அடகு கடையில் ரூ.1½ கிலோ நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் 50 கிராமம் தங்க நகைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மீதி நகைகளை அவர்கள் நக்சலைட்டிடம் கொடுத்திப்பதாக தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் நக்சலைட்டுகளின் தூண்டுதலின்பேரில் வடமாநில கொள்ளையர்கள் மிக நுணுக்கமான முறையில் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்று நக்சலைட்டிடம் அவர்கள் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனவே விருத்தாசலத்தில் இருந்து சேலம் வரை உள்ள பகுதிகளில் நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் குளிர்பானம் வாங்கி கொடுத்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). விருத்தாசலத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பூந்தோட்ட பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தார்.

    அதே பகுதியில் கூலி தொழிலாளி ஜெகநாதன் (60) வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு ஜெனிபர் சென்றார். ஜெகநாதனின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே அங்கு ஜெனிபர் வீட்டு வேலைகளை செய்தார்.

    அப்போது ஜெனிபரை ஜெகநாதன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என கூறி குளிர்பானம் மற்றும் சாக்லேட் வாங்கி கொடுத்து அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் ஜெனிபர் குளிர்பானம் குடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். ஆசிரியர் விசாரித்தபோது தொழிலாளி ஜெகநாதன் குளிர்பானம் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. அவர் ஏன் குளிர்பானம் வாங்கி கொடுக்கிறார் என கேட்டபோது, ஜெனிபரை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையறிந்த ஜெனிபரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர். ஜெனிபரை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    திட்டக்குடி அருகே கழிவறைக்கு அழைத்து சென்று சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளி யார்? என்று பெற்றோரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் பரமேஷ்வரி (வயது 7), ராஜேஷ்வரி (6), மகன் நித்தீஸ் (4). பரமேஷ்வரியும், ராஜேஷ்வரியும் சித்தேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

    நித்தீஷ் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். தினமும் அவன் வேனில் பள்ளிக்கு சென்று வந்தான. நேற்று காலை நித்தீசை சங்கீதா வேனில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரது மகள்கள் ராஜேஷ்வரி, பரமேஷ்வரி ஆகியோரையும் பள்ளிக்கு அனுப்பினார்.

    இதையடுத்து சங்கீதாவும், முருகேசனும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 5 மணிக்கு நித்தீஷ் பள்ளி முடிந்து வேனில் திரும்பி வந்தான். வீட்டின் முன்பு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். 6.30 மணி அளவில் சங்கீதா வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். நித்தீசை எங்கே என்று தனது மகள்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அவன் நண்பர்களுடன் வெளியே விளையாடி கொண்டிருக்கிறான் என்று கூறினர்.

    உடனே சங்கீதா அவன் விளையாடி விட்டு வரட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் இரவு 8 மணிவரை சிறுவன் நித்தீஷ் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சங்கீதா நித்தீசை பல்வேறு பகுதிகளில் தேடினார். அப்போது முருகேசனும் வீட்டுக்கு வந்தார். மகனை காணவில்லை என்று அவரிடம் சங்கீதா கூறினார். இருவரும் வீட்டின் தோட்டத்துக்கு சென்று தேடினர்.

    தோட்டத்தில் உள்ள கழிவறை அருகே ரத்தம் சிதறி கிடந்தது. கழிவறை கதவை திறந்து பார்த்த போது நித்தீஷ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடனே நித்தீசின் பிணத்தை கைப்பற்றி வீட்டுக்கு கொண்டுவந்தனர். மகனின் உடலை பார்த்து சங்கீதா கதறி அழுதார். அவன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசாருக்கு பெற்றோர் தெரிவிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    சிறுவன் நித்தீசை யாரோ தோட்டத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவன் எதற்காக கொலை செய்யப்பட்டான்? அவனை கொன்ற கொலையாளி யார்? என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமா? அல்லது முன்விரோதம் காரணமா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதையொட்டி முருகேசன் மற்றும் சங்கீதாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதை போலீசுக்கு ஏன் தெரிவிக்க வில்லை என்று கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்க வில்லை. இதனால் கணவன்- மனைவியிடம் தனித்தனியாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்க கிரீடம், ஒட்டியாணம் காணிக்கையாக சென்னை பக்தர் வழங்கினார்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த பக்தர் இங்குள்ள நடராஜருக்கு 550 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் மற்றும் சிவகாமசுந்தரிக்கு 280 கிராம் எடையுள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.

    தங்க கிரீடம், ஒட்டியாணத்தில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

    கோவில் தீட்சிதர்கள் முன்னிலையில் தங்க கிரீடம், ஒட்டியாணம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாமிக்கும், அம்மனுக்கும் கிரீடம், ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளில் படிப்பவர்களும் சாதனை படைக்க முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமை தாங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கல்வியில் சமத்துவம் வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயர வேண்டும். அரசு பள்ளி மாணவர்களால் டாக்டராகவும், என்ஜினீயராகவும், விஞ்ஞானிகளாகவும், என்னை போன்ற கலெக்டராகவும் உருவாக முடியும். ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிக்கூடங்கள் தான்.

    நாம் அரசு பள்ளிக்கு செல்ல காரணம் தமிழ் சமூகத்தினர். அரசு பள்ளியில் தான் மாணவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். நான் காணொலி காட்சி மூலமாக பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

    மாணவர்களை தரம் மிக்கவர்களாக மாற்றுவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பாதை இயக்கம் ஒரு சமூக சேவை அமைப்பு. ஏழைகளை ஏற்றிவிடும் ஏணி. நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் அமைப்பாகும்.

    தமிழ் வழியில் படிப்பதால் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தாழ்வு மனப்பான்மை ஆசிரியருக்கும் வரக்கூடாது. ஒப்பற்ற அடையாளம் நம் தமிழ்மொழி, தமிழை தாழ்வாக கருதாதீர்கள். அதனை வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள் டாக்டர்கள், என்ஜினீயர்கள், கலெக்டர்களை உருவாக்கி விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பண்ருட்டி அருகே வேப்பமரத்தில் ஆஞ்சநேயர் உருவம் தோன்றியதால் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணத்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இதன் எதிரில் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆஞ்சநேயர் கண் திறந்து பார்ப்பது போன்று உருவம் தெரிவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். ஆச்சரியமடைந்த அவர்கள் மற்றவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மரத்தில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவத்தை பார்த்து பக்தி பரவசத்துடன் கும்பிட்டனர். பெண் பக்தர் ஒருவர் அருள் வந்து சாமி ஆடி குறி சொன்னார்.

    நேரம் ஆக ஆக அங்கு கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×