என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பமரத்தில் உருவான ஆஞ்சநேயர் உருவத்தை படத்தில் காணலாம்.
    X
    வேப்பமரத்தில் உருவான ஆஞ்சநேயர் உருவத்தை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி அருகே வேப்பமரத்தில் ஆஞ்சநேயர் உருவம் தோன்றியதால் பரபரப்பு: பக்தர்கள் வழிபாடு

    பண்ருட்டி அருகே வேப்பமரத்தில் ஆஞ்சநேயர் உருவம் தோன்றியதால் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணத்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இதன் எதிரில் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆஞ்சநேயர் கண் திறந்து பார்ப்பது போன்று உருவம் தெரிவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். ஆச்சரியமடைந்த அவர்கள் மற்றவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மரத்தில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவத்தை பார்த்து பக்தி பரவசத்துடன் கும்பிட்டனர். பெண் பக்தர் ஒருவர் அருள் வந்து சாமி ஆடி குறி சொன்னார்.

    நேரம் ஆக ஆக அங்கு கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×