என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த மஞ்சகுழி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி அம்சவள்ளி (வயது 46). இவர்களது மகன் சரவணன் (28). இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகா (17) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சினேகாவின் தந்தை கல்யாணசுந்தரம் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டை போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக சரவணனின் தாய் அம்சவள்ளியை பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அம்சவள்ளியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அம்சவள்ளி வீடு திரும்பினார்.
தன்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதை நினைத்து அம்சவள்ளி மனம் உடைந்து காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது அம்சவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அம்சவள்ளியின் உடலை பிரேதபரி சோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் உறவினர்கள் மற்றும் அதேபகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்றுகாலை ஒன்று திரண்டனர். அவர்கள் பி.முட்லூர் பகுதியில் புவனகிரி- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு விஜயகுமார். சிதம்பரம் ஏ.எஸ்.பி. நிசா, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபிறகு தான் அம்ச வள்ளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு போலீசாரின் விசாரணையே காரணம். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி ஆஷா. இவர்களுக்கு ஹாத்திபா என்ற 2½ வயது பெண் குழந்தை இருந்தது.
முகமது அலியை, ஆஷா கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் முகமது அலி வேலூரை சேர்ந்த சகிலா பானுவை 2-வது திருமணம் செய்து கொண்டார். குழந்தை ஹாத்திபா முகமது அலியுடன் வசித்து வந்தது.
கடந்த 3-ந்தேதி ஹாத்திபாவை திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் பலன்இல்லை. இந்நிலையில் முகமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டியில் ஹாத்திபா பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தை ஹாத்திபாவின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை ஹாத்திபா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து முகமது அலியின் 2-வது மனைவி சகிலா பானு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பூவராகவமூர்த்திக்கும், சகிலா பானுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும், ஹாத்திபாவை பூவராகவமூர்த்தி கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சகிலா பானுவையும், பூவராகவமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் குழந்தை ஹாத்திபா கொலை செய்யப் பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட கள்ளக்காதல் ஜோடி பூவராகவமூர்த்தி, சகிலாபானு ஆகியோரிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது குழந்தையை கொன்றது ஏன் என்று பூவராகவமூர்த்தி வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது வீட்டின் அருகே முகமது அலி வசித்து வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த சகிலாபானுவை அவர் 2-வது திருமணம் செய்து அழைத்து வந்தார்.
முகமது அலியுடன் அவரது 2½ வயது மகள் ஹாத்திபாவும் இருந்து வந்தது.
சகிலாபானுவை நான் அடிக்கடி சந்தித்து பேசினேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
முகமது அலி வியாபாரம் தொடர்பாக காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார். அப்போது நான் முகமது அலி வீட்டுக்கு சென்று சகிலாபானுவுடன் உல்லாசமாக இருப்பேன்.
அதேபோல் கடந்த 3-ந் தேதி சகிலா பானு வீட்டுக்கு சென்றேன். சகிலா பானுவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது குழந்தை ஹாத்திபா எங்களை பார்த்து சத்தம் போட்டது. நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்தது.
எனவே குழந்தை ஹாத்திபாவின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். குழந்தையை மொட்டைமாடிக்கு தூக்கிச்சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டேன்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு போலீசில் பூவராகவமூர்த்தி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். தற்போது ஏரியில் 41.25 அடி தண்ணீர் உள்ளது.
ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் வழக்கமாக தினமும் 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
தற்போது ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் 30 கன அடி தண்ணீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் கீழணையில் தண்ணீர் இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இதனால் ஏரியை நம்பி சாகுபடி செய்த சம்பா பயிர்களும் கருகி வருகிறது. போர்வெல் மூலம் சாகுபடி செய்த விவசாயிகளும் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பண்ருட்டி,:
தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாள் நல்லூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் தனது நிலத்தில் சவுக்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. இதனால் மன வேதனை அடைந்த சங்கர் தனது நிலத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி அருகேயுள்ள மணம் தவழ்ந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால் (60). வறட்சியினால் இவரது நிலத்தில் சாகுபடி செய்த கொய்யா விவசாயம் பொய்த்துப் போனதால் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி பெரியநாயகம் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் நெல் மற்றும் உளுந்து பயிரிட்டு இருந்தார்.
இன்று காலை நிலத்திற்கு சென்ற அவர் பயிர்கள் கருகியதை கண்டு மன முடைந்தார்.
வீட்டிற்கு வந்த அவருக்கு சிறிது நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு இருவேல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பெரியநாயகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் நெல் மற்றும் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாடிய பயிரைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்வதும், சுருண்டு விழுந்து சாவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வறட்சியால் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சென்று நேற்று பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் டெல்டாவின் கடைசி பகுதியான சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது விவசாயிகள் அவர்களிடம் கருகிய பயிர்களை காட்டி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் மேலமூங்கிலடி பகுதியில் அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான செயலாகும்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தன்னம்பிக்கைமிக்கவர்கள். ஒரு ஆண்டு விவசாயம் பொய்த்தாலும் அடுத்த ஆண்டு விளைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் இறப்பு என்பது பொய்யான, தவறான தகவல். சிலர் வயது முதிர்வு, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகளால் இறந்திருக்கலாம் என்றார்.
அமைச்சர் எம்.சி. சம்பத்தின் இந்த பேச்சுக்கு விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 38). இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய முதல் மனைவி ஆஷா. இவர்களுக்கு 2½ வயதில் ஹாத்திபா என்கிற பெண் குழந்தை இருந்தது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஹாத்திபா தந்தையுடன் வசித்து வந்தாள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முகமது அலி, ஷகிலாபானு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஹாத்திபா திடீரென மாயமானாள். பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு குடிநீர் குழாயில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உரிமையாளர் குணசேகரன் என்பவர் மொட்டை மாடியில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எலி ஏதாவது செத்து கிடக்கிறதா? என்று பார்த்தார்.
அப்போது ஹாத்திபா தண்ணீரில் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி முகமது அலியிடம் தெரிவித்தார்.
இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தண்ணீர் தொட்டி மாடி தளத்தில் இருந்து 6 அடி உயரத்தில் உள்ளதால் குழந்தை தானாக ஏறி விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்பு போலீசார், ஹாத்திபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஹாத்திபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முகமது அலி, ஷகிலாபானு, மற்றொரு வாலிபர் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண் பானைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்ய தொடங்கி விட்டனர்.
கடலூர் மாவட்டம் சாவடி, சி.என்.பாளையம், திருத்துறையூர், விருத்தாசலம் உள்பட பல்வேறு கிராமங்களில் புதிய மண் பானைகள் தயார் செய்யப்படுகிறது.
கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகைக்காக ½ கிலோ அரிசி முதல் 7 சின்னபடி அரிசியிட்டு பொங்கல் வைப்பதற்கு ஏற்ற வகையில் பல்வேறு அளவுகளில் மண் பானைகள், சட்டி, அடுப்புகள் தயாரித்து வருகிறார்கள்.
கிராமங்களில் இன்னும் மண்பானைக்கு மவுசு தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. மண்பாண்ட தொழில் செய்யும் திருத்துறையூர் காசிநாதன்(வயது 58) கூறியதாவது:-
மண்பானைகள் செய்வதற்கு பனப்பாக்கம் ஏரியில் இருந்து மண் எடுத்து வருகிறோம். ஆனால் முறையாக எங்களுக்கு மண் எடுப்பதற்கு தாசில்தார் பர்மிட் வழங்கி எங்கள் தொழிலுக்கு வாழ்வளிக்க வேண்டும்.
எந்தவித கடனும் வங்கிகள் வழங்குவதில்லை. எங்களுக்கு அரசு கூட்டுறவு கடன் சங்கம் லோன் வழங்க வேண்டும். அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.4 ஆயிரம் பணம் வழங்கினார். இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதியதாக செய்யப்படும் மண்பானைகள் பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மண்பானைகள் ரூ.25 முதல் ரூ.100 வரை மொத்த வியாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறார்கள்.
சிதம்பரம் அருகேயுள்ளது நந்திமங்கலம் கிராமம். இங்குள்ள சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான வயலுக்குள் முதலை புகுந்து விட்டதை பொதுமக்கள் பார்த்தனர்.
அவர்கள் உடனடியாக குமராட்சி போலீசுக்கும், சிதம்பரம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். வனவர் சோமசுந்தரம், வனக் காப்பாளர் ராஜேஷ் குமார் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் வயலுக்குள் புகுந்து 6 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட அந்த முதலையை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த முதலை சிதம்பரம் அருகேயுள்ள வக்காரமேரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது. நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் முதலைகள் அங்கிருந்து வயல் மற்றும் ஊருக்குள் புகுந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு வால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவர் பெண்ணாடம் முருகன் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவு 3 மணியளவில் மரக்கடையில் திடீரென்று தீ பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த தீ கடை முழுவதும் பரவியது. இதில் அங்கிருந்த மேஜை, பீரோ, கட்டில் மற்றும் மரப்பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் எரிந்து சேதமானது.
மரக்கடையில் எரிந்த தீ அருகில் உள்ள கபிலன் என்பவர் வீட்டுக்கும் பரவியது. அவர் வீட்டில் உள்ள சமையல் அறை தீ பற்றி எரிந்தது. உடனே கபிலன் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.
தீ விபத்தில் சமையல் அறையிலிருந்த பிரிட்ஜ், கிரைண்டர் மற்றும் கபிலனின் மகன் வைத்திருந்த ரூ.2 ஆயிரமும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் மரக்கடை மற்றும் வீட்டில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சாகுபடி செய்த விவசாய பயிர்கள் கருகி வருகின்றன.
பயிர்கள் கருகியது கண்டு மனமுடைந்த 2 பெண்கள் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். அதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே யுள்ள தீவளூரைச் சேர்ந்த வர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதாம்பாள் (வயது 50). செல்வராஜ் இறந்து விட்டதால் ஜெகதாம்பாள் தனியே வசித்து வந்தார்.
அந்த பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பயிர்கள் கருகியதால் ஜெகதாம்பாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் வயலுக்குச் சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜெகதாம்பாள் பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலாஅம்மாள் (60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அதில் பயிரிடப்பட்டிருந்த பயிர் கருகியதால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தனது தாயாரிடம் பணம் வாங்குவதற்காக சென்றார்.
பணம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளியில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிறுமியை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கிராமமக்கள் ஆத்திரமடைந்தனர். வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து போலீசார் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம்(17), அஜித்குமார்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கல்லூரி மாணவர் அருண்குமாரை தேடி வருகிறார்கள். அவர் கோவையில் படித்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள மாப்புடையூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தனது தாயாரிடம் பணம் வாங்குவதற்காக சென்றார்.
பணம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளியில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் சிறுமியை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக கூறப்படும். கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள். அவர் கோவையில் படித்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.






