என் மலர்
செய்திகள்

சிதம்பரம் அருகே வயலுக்குள் புகுந்த 6 அடி முதலை மீட்பு
சிதம்பரம் அருகே வயலுக்குள் புகுந்த முதலையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகேயுள்ளது நந்திமங்கலம் கிராமம். இங்குள்ள சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான வயலுக்குள் முதலை புகுந்து விட்டதை பொதுமக்கள் பார்த்தனர்.
அவர்கள் உடனடியாக குமராட்சி போலீசுக்கும், சிதம்பரம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். வனவர் சோமசுந்தரம், வனக் காப்பாளர் ராஜேஷ் குமார் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் வயலுக்குள் புகுந்து 6 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட அந்த முதலையை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த முதலை சிதம்பரம் அருகேயுள்ள வக்காரமேரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது. நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் முதலைகள் அங்கிருந்து வயல் மற்றும் ஊருக்குள் புகுந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story