என் மலர்
செய்திகள்

பெண்ணாடம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
பெண்ணாடம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தனது தாயாரிடம் பணம் வாங்குவதற்காக சென்றார்.
பணம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளியில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிறுமியை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கிராமமக்கள் ஆத்திரமடைந்தனர். வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து போலீசார் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம்(17), அஜித்குமார்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கல்லூரி மாணவர் அருண்குமாரை தேடி வருகிறார்கள். அவர் கோவையில் படித்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story