என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால் தான் அவர், முதல்-அமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உழைத்து வருகிறார். வார்தா புயலில் மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொண்டார். மேலும், ஆந்திராவில் முதல்-மந்திரியிடம் பேசி, கிருஷ்ணா நீரை பெற்று தந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அவர் போட்டியிட்ட போது மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தவர் மதுசூதனன். தற்போது, இடைத்தேர்தலில் அவர் இரட்டை மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா முழுவதிலும் உள்ள போலீஸ் நிலையங்களை கணினிமயாக்கும் திட்டத்தின் அடிப்படையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணைதளம் மூலம் கடந்த 5–6–2013–ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கையால் எழுதப்பட்டு வந்த முதல் தகவல் அறிக்கை முற்றிலும் ஒழிக்கப்பட்டு கடந்த 15–4–2016 முதல் கணினி மூலம் அச்சிடப்பட்ட பிரதிகளே நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் காணாமல் போன ஆவணங்களை பற்றி இணைதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். போலீஸ் விசாரணைக்கான இணையதள விண்ணப்பம், சொந்த வாகனங்களுக்கான தடையில்லா சான்று, பொது கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி விண்ணப்பம் ஆகியவை இணைதள சேவை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இணைதளம் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம் குறித்து அரசு வக்கீல்களுக்கான கணினி பயிற்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கணினி பயிற்சி அறையில் நடைபெற்றது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
அரசு வழக்குறைஞர்கள் துணை இயக்குனர் அம்ஜத்அலி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் மற்றும் அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.
போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகள் 1995ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, தற்போது 22-வது முறையாக தமிழ் நாட்டிலுள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் போலியோ வைரஸ் தாக்குதல் வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக இந்த ஆண்டு முதற் கட்டமாக வருகிற 2-ந் தேதி அன்றும் இரண்டாவது கட்டமாக 30-ந் தேதி அன்றும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2,48,286 குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் விருத்தாச்சலம் கோமதி, மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளி அலுவலர் பிச்சையப்பன், கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் கண்ணன், தொலைபேசி துறை அலுவலர் சங்கர், என்.எல்.சி. மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கனி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மின்சார வாரிய இளநிலை பொறியாளர் செரி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாரதாம்பாள் (வயது 60). இவர் மற்றும் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (46), மேலவன்னியூரை சேர்ந்த சிங்காரு(60) ஆகிய 3 பேரும் விளத்தூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து பறந்து வந்த விஷவண்டுகள் அவர்கள் 3 பேரையும் கடித்தது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலூர்:
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்கள் ஆமைகளின் இனப்பெருக்க காலம். இந்த கால கட்டத்தில் ஆமைகள் கடலோர பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம்.
இந்த முட்டைகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதம் அடையாமல் இருக்கவும், ஆமை இனங்கள் அழிவதை தடுக்கவும் கடலூர் வனத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் கடலோர பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாப்பதற்காக பொரிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
கடலோர பகுதிகளில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை சேகரித்து இந்த பொரிப்பகத்துக்கு எடுத்து வந்து அங்குள்ள 35 குழிகளில் முட்டைகளை பாதுகாத்து வைக்கின்றனர். 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முட்டையில் இருந்து ஆமைகுஞ்சுகள் வெளிவந்ததும் அவற்றை எடுத்து வனத்துறையினர் கடலில் விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி சவுந்தரராஜன், வனச்சரகர்கள் அப்துல் அமீது, ராஜேந்திரன், வன காப்பாளர் ஆதவன் ஆகியோர் சுமார் 4 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, சொத்திக்குப்பத்தில் உள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதில் 253 முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பிடித்து நேற்று கடலில் விட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை 1,613 முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). கூலிதொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு அனுசுயாஸ்ரீ என்ற 3½ வயது பெண் குழந்தை இருந்தது.
ஆறுமுகத்திற்கு குடி பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆறுமுகம் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். மனைவி நதியாவுடன் தகராறு செய்தார்.
மனமுடைந்த நதியா தனது மகள் அனுசுயாஸ்ரீயை வீட்டில் விட்டு விட்டு சிதம்பரத்தை அடுத்த டி.நெடுஞ்சேரி கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இரவில் குழந்தை அனுசுயாஸ்ரீ வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தாள். குடிபோதையில் இருந்த ஆறுமுகம் திடீரென அனுசுயாஸ்ரீ மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து அவள் அலறி துடித்தாள்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தீயில் கருகிய அனுசுயாஸ்ரீயை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுசுயாஸ்ரீ இன்று காலை பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து குமராட்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
3½ வயதே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே தீ வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் பாதாள சாக்கடை திட்ட குழாய்களை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. கடலூர் மோகினி பாலம் அருகே பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி கடலூர் முதுநகரைச்சேர்ந்த ஜெயக்குமார், வேலு, புதுவை சோரியாங்குப்பத்தைச்சேர்ந்த முருகன் ஆகிய 3 தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களது உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
3 பேர் பலியானது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பணியாளர்களை அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையொட்டி தனியார் நிறுவன காண்டிராக்டர் ராமச்சந்திரன், திட்ட மேலாளர் ராவணன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக கவனிக்கத் தவறிய குடிநீர்வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாரியப்பா வினோத்ராஜ், உதவி நிர்வாக பொறியாளர் விஜயகுமார் ஆகிய 2 பேர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தீரஜ்குமார் பிறப்பித்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிந்ததும் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பாதாள சாக்கடை குழாய் பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வந்தது.
கடலூர் மோகினிபாலம் அருகே பாதாள சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டது.
கடலூர் முதுநகர் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 26), வேலு(28), புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த முருகன்(39) ஆகிய 3 பேரும் பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக வந்தனர்.
ஜெயக்குமாரும், வேலுவும் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே இறங்கினர். அப்போது அவர்கள் 2 பேரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
நீண்டநேரம் ஆகியும் 2 பேரும் வெளியே வராததால் முருகன் உள்ளே இறங்கி பார்த்தார். அப்போது அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
மயக்கநிலையில் இருந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் முருகனும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
விஷவாயு தாக்கி இறந்த ஜெயக்குமார், வேலு ஆகியோரின் உடல்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
பலியான 3 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காண்டிராக்டர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் ஜானிடாம்வர்க்கீஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீசுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யனார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இதையொட்டி சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன காண்டிராக்டர் ராமச்சந்திரன், திட்ட மேலாளர் ராவணன் ஆகியோர் மீது உடல் பாதுகாப்புக்கு அபாயம் விளைவித்தல், இறப்புக்கு காரணமாக இருத்தல் (336, 304-ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடை மற்றும் பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்வதால் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் கடலூரில் இன்று அதுபோன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் முதுநகர் சாலையில் இன்று பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது திடீரென விஷவாயு தாக்கியது. இச்சம்பவத்தில் மூன்று ஊழியர்களுக்கும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஊழியர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநில மகளிர் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
60 ஆண்டுகால ஆட்சியில் காமராஜரால் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கனரக தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசும் நாம் இன்றைக்குத் தேர்தலில் கூட்டணியை எதிர்பார்க்கிறோம். கூட்டணி கனவை சுமந்து கொண்டிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது?
கட்சியின் கூட்டமைப்பையும், உறுப்பினர் சேர்க்கையையும் வலுப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக போராடாமல் ஆட்சி அமைக்க முடியாது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு காங்கிரசார் போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படக் கூடாது. போட்டியிடுவதுதான் முக்கியம்.
அடுத்த மாதம் முதல் தொகுதி வாரியாகக் கட்சியினரைச் சந்திக்கும் நிகழ்ச்சி, உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
பெண் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் வளர்ச்சி யடையாமல் நாடு முன்னேற்ற மடையாது. மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் உள்ளனர். அவர்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக இருக்க முடியும்.
தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ வலிமை, அணு சக்தி, தொழில் வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியா இன்றைக்கு வளர்ச்சி பெற்றுள்ளதற்கு இந்திராகாந்தியின் தொலை நோக்குப் பார்வையே காரணம். அவரின் செயல் பாடுகளே இவற்றுக்கு அடித்தளமிட்டன. அவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு ழுழுவதும் நாம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை யூரியா உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேத்தியாத்தோப்பு நோக்கி புறப்பட்டது. லாரியை விருத்தாசலம் ஆலடி பகுதியை சேர்ந்த அரசன் மகன் பழனிவேல் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரி அருகே வந்த போது அங்குள்ள ஒரு வளையில் பழனிவேல் லாரியை திருப்பினார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மாரியப்பன்(22) என்பவர் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மாரியப்பனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் லாரி டிரைவர் பழனிவேல் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர்பீச் உள்ளது. இங்கு விடுமுறை தினங்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்வர் பீச்சில் கடல் உள்வாங்கியது. ஒரு வாரம் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கடல் 20 அடி தூரம் உள்வாங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இரவிலும் கடல் உள்வாங்கியே இருந்தது. இன்று காலை வரை அதேநிலை நீடித்தது. கடல் அமைதியாக இருந்தது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சில்வர்பீச்சுக்கு வரவில்லை.
அடிக்கடி கடல் உள்வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சுனாமி தாக்குதலுக்கு பின்னர்தான் கடலூர் சில்வர் பீச்சில் கடல் உள்வாங்குவதும், கடலில் ராட்சத அலைகள் எழுந்து சீற்றமாக காணப்படுவதும் நடந்து வருகிறது.
இதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. காலமுறை மாற்றத்தால் கடல் உள்வாங்கும் சம்பவம் நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்தோம். குழந்தைகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடல் உள்வாங்கியதை பார்த்ததும் திகைத்துப்போனோம். உடனே அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினோம்.
அந்த நேரத்தில் போதிய அளவு போலீசாரும் அங்கு இல்லை. மேலும் இதுபோன்ற கடல் சீற்றம் அடிக்கடி நிகழ்வதால் கடல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து சரியான காரணத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகள், மீனவர்களை காக்க வேண்டும் என்றனர்.






