என் மலர்
செய்திகள்

செயல்வீரர்கள் கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசியபோது எடுத்த படம்.
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: நடிகர் ராமராஜன்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நடிகர் ராமராஜன் பேசியுள்ளார்.
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால் தான் அவர், முதல்-அமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உழைத்து வருகிறார். வார்தா புயலில் மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொண்டார். மேலும், ஆந்திராவில் முதல்-மந்திரியிடம் பேசி, கிருஷ்ணா நீரை பெற்று தந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அவர் போட்டியிட்ட போது மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தவர் மதுசூதனன். தற்போது, இடைத்தேர்தலில் அவர் இரட்டை மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story