என் மலர்
செய்திகள்

கடலூரில் விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விபத்து
கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
பாதாள சாக்கடை மற்றும் பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்வதால் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் கடலூரில் இன்று அதுபோன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் முதுநகர் சாலையில் இன்று பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது திடீரென விஷவாயு தாக்கியது. இச்சம்பவத்தில் மூன்று ஊழியர்களுக்கும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஊழியர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story