search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
    X

    அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

    • 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
    • நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

    கோவை,

    கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கலந்தாய்வு நடை முறை நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 1-ந் தேதி வணிகப்பிரிவு பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    ஜூன் 2-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும், ஜூன் 3 -ந் தேதி பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இறுதியாக ஜூன் 5 -ந் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்தைக் காணலாம் என்று முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×