என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர் அடையாள அட்டை- செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்
    X

    காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர் அடையாள அட்டை- செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்

    • சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 31 பேர் கமிட்டியில் இடம் பெற வேண்டும்.
    • கமிட்டிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கிராம கமிட்டி அமைக்கப்படுகிறது.

    மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நேரில் சென்று கிராமகமிட்டிகளை அமைத்து வருகிறார்கள். ஊராட்சி, வார்டுகள், கிராமங்களில் குறைந்த பட்சம் 10 பேர் வீதம் இடம் பெற வேண்டும். நகராட்சி, மெயின் கமிட்டியில் 15 பேர், பேரூராட்சியில் 10 பேர் வீதம் இடம் பெற வேண்டும்.

    சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 31 பேர் கமிட்டியில் இடம் பெற வேண்டும். இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 60 சதவீத கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வடசென்னை மேற்கு மாவட்டத்தில் திரு.வி.க.நகர், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதற்கான பட்டியலை மாவட்ட தலைவர் டில்லிபாபு, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார். அதே போல் மயிலாப்பூர் தொகுதிக்கான பட்டியலை அந்த தொகுதி பொறுப்பாளர்கள் மயிலை அசோக், மீரா ஆகியோர் வழங்கினார்கள்.

    கமிட்டிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    பல்லாவரம் பகுதியில் செல்வப்பெருந்தகை இன்று வழங்கினார்.

    இன்று மாலையில் நாங்குனேரி தொகுதியில் உள்ள அரியாபுரம் பகுதியில் வழங்க உள்ளதாகவும் முதற்கட்டமாக வழங்குவதற்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாராக இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை கூறினார்.

    Next Story
    ×