search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் ரெயிலை மறித்து காங்கிரசார் போராட்டம்-120 பேர் கைது
    X

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அந்தியோதயா ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

    நெல்லையில் ரெயிலை மறித்து காங்கிரசார் போராட்டம்-120 பேர் கைது

    • 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து, டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அந்தியோதயா ரெயிலை மறித்தனர்

    இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர்.

    அப்போது 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    120 பேர் கைது

    இந்த போராட்டத்தில் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலை வர் வக்கீல் காமராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்ககுமார், உதயகுமார், கவிபாண்டியன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ள பாண்டியன், அழகை கிருஷ்ணன்,

    சிவன் பெருமாள், மாவட்ட செயலாளர் கே.எஸ். மணி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க செயலாளர் தனசிங் பாண்டியன், சிவாஜி பாலசந்தர், மண்டல தலைவர்கள் பரணி இசக்கி, அய்யப்பன், கெங்கராஜ், முகமது அனஸ் ராஜா, ராஜேந்திரன் மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்ட த்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×