என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்
மேலப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.
- மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதானிக்கு மத்திய அரசு துணை போவதாக கூறி மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மேலப் பாளையம் ரவுண் டானா சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மஹேந்திர பாண்டியன், பாளை மண்டல தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், பரணி இசக்கி, சொக்கலிங்க குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






