என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
    • 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையிலான போலீசார் கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரது கடையிலும், பாபநாசம் தெற்கு ராஜவீதியில் உள்ள சுகுமார் என்பவரது கடையிலும் தடை செய்யப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×