என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய சாமியார் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
    X

    உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய சாமியார் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

    • தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக பேசியதாக குற்றச்சாட்டு
    • சட்டரீதியாக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    கோவை,

    தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று அந்த அமைப்பை சேர்ந்த வர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது அவர் கூறிய சனாதனம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக பேசியதோடு, அவரின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாகவும் பேசியது வேகமாக பரவி வருகிறது

    மேலும் பரமஹம்ச ஆச்சாரியார் வெளியிட்ட காணொலி காட்சிகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ளது. இவ்வகையில் ஒரு மாநில அமைச்சருக்கே கொலை மிரட்டல் விடுக்கின்ற வகையிலும் மற்றும் சமூகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வகையிலும் பேசிய பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர் மீது சட்டரீதியாக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

    Next Story
    ×