search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி யூனியன் அலுவலகத்தில்  சமுதாய வளைகாப்பு விழா- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    X

    வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

    உடன்குடி யூனியன் அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு விழா- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்

    • தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடைபெற்றது.
    • 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கப்பட்டது

    உடன்குடி:

    தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் உடன்குடி வட்டார ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலம்கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் தமிழக அரசு சார்பில் பெண்கள் நலன், கிராமப்புற பெண்களின்சுய பொருளாதார முன்னேற்றம், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி வட்டார வளர்ச்சி ஆலுவலர் ஜான்சிராணி, உடன்குடி பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார மருத்துவ ஆலுவலர் சு.ஆனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் -மரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், முபாரக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ரவிராஜா, மகாவிஷ்ணு, ஷேக் முகம்மது,

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் லெபோரின், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அன்புராணி, ஆபித், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், ஆஜய், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி பக்கீர் உட்பட திரளான அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×