search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ, மேயரிடமோ தெரியப்படுத்துங்கள் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி, தொகுதி பொறுப்பாளர் சொ.பெருமாள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    'குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ, மேயரிடமோ தெரியப்படுத்துங்கள்' - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன.
    • ஜூன் 3-ந் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் தங்களது பகுதியில் வீடு, வீடாக சென்று தினமும் 1மணி நேரமாவது கட்சிக்கு உழைக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர்களை சேர்க்க லாம்.

    தி.மு.க. ஆட்சி வந்த பின்பு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் முன் வைக்கின்றனர். செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ அல்லது மேயரி டமோ தெரியப்படுத்துங்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன. சாதி, மதம் கிடையாது. சட்டமன்றத்தில் கவர்னர் தெரிவித்த கருத்துக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து நம்முடைய உரிமையை முதல்-அமைச்சர் பாது காத்தார். மற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தனர்.கொள்கை உணர்வோடு நாம் இருக்க வேண்டும்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜூன் 3-ந் தேதிக்குள் நமது மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துகொடுக்க வேண்டும். பூத் கமிட்டியை வரும் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    அதில் இளைஞர்கள் பெண்கள் இடம் பெற வேண்டும். வட்டச் செயலாளர்கள் வட்டப்பிரதி நிதிகள் தான் அந்த பகுதியில் தி.மு.க. வளர்ச்சிக்கு துணையாக இருந்து செயல் படக்கூடியவர்கள்.

    தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன. அதற்கு தகுந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தரவேண்டும். அதை முறையாக தலைமை கழகம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்சாண்டர், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன் தாஸ் சாமுவேல், ஜெபசிங், பிரதீப், பிரபு, ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், சேர்மபாண்டி, சக்திவேல், செந்தில்குமார், மாநகர அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×