என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் பிளஸ்-1 மாணவனை தாக்கிய கல்லூரி மாணவர்கள்
- மாலை டவுன் பகுதியில் டியூசனுக்கு சென்ற பிளஸ்-1 மாணவன் பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
- விசாரணையில் சிறுவனை தாக்கியது கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் என்பது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவன் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இவன் நேற்று மாலை டவுன் பகுதியில் டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவனை வழிமறித்த சிலர் மாணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறுவனை அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த சிறுவன் இது தொடர்பாக தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்தி போது சிறுவனை தாக்கியது கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாணவனை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story






