என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.
சாதி சான்றிதழ்கள் விவகாரத்தில் போலீஸ் தடையை மீறி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
- தடையை மீறி தடுப்புச்சுவரை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
- சம்பந்தப்பட்ட தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தென்காசி:
புளியங்குடி பகுதியை சேர்ந்த இந்து குறவர் சமுதாய தலைவர் தங்கவேலு தலைமையில் ஊர் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி தடுப்புச்சுவரை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரிடம் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புளியங்குடி பகுதியை சேர்ந்த எங்கள் சாதி அல்லாதவர்கள் சிலர் இந்து குறவர் சமுதாயத்தினர் என சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். இதனால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய இட ஒதுக்கீடு, உதவித்தொகை பாதிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.






