search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு  திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    நடுக்கல்லூரில் உள்ள வாழைநார் கைவினை பொருள் தயாரிப்பு மையத்தில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்த காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதே பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், நடுக்கல்லூரில் இயங்கி வரும் வாழை நாரில் இருந்து கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் கூடத்தையும் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், கோடகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×