search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர் மாநகராட்சி சுடுகாட்டில் பணம் வசூல்- அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் குற்றச்சாட்டு
    X

    திருவொற்றியூர் மாநகராட்சி சுடுகாட்டில் பணம் வசூல்- அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் குற்றச்சாட்டு

    • அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    • தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டபின் அ.தி.மு.க. மாநகராட்சி மன்றகுழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிராம தெரு ரயில்வே சுரங்க பாதை பணிகள் மிக மந்தமாக நடைபெறுகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. வீடுகளை அகற்றியவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. ரெயில்வேயும் தமிழக அரசும், மாநகராட்சியும் ஒருவருக்கொருவர் காரணங்களை கூறி கொண்டிருக்கின்றனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக ஊழியர்கள் விடுமுறையில் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. மழைக்காலத்தில் மாநகராட்சிக்காக வேலை பார்த்த அடிமட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சி ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி உள்ளனர். அதை உடனே வழங்க வேண்டும். திருவொற்றியூர் சுடுகாட்டில் தனி நபர் ஒருவர் பண வசூல் செய்கிறார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் பண வசூல் தொடர்கிறது.

    இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எனது வார்டில் உள்ள கோத்தாரி என்ற நிறுவனம் மழை நீர் கால்வாயை உள்ளடக்கி தனது எல்லையை பென்சிங் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ. தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்கள் தி. மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. எங்கள் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு இந்த வெற்றி முதல் படியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×