search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் தூய்மை சுற்றுலா நிகழ்ச்சி
    X

    விழாவில் உறுதிமொழி எடுத்த கொண்ட காட்சி.

    சேலத்தில் தூய்மை சுற்றுலா நிகழ்ச்சி

    • சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி கலெக்டர் கார்மேகம் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , துணை மேயர் சாரதா தேவி, மண்டல க்குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோகுல்நாத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தூய்மை சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 4 மண்டலங்களுக்கு தனிதனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 மாணவ- மாணவியர்களை கலந்து கொள்ள செய்து, குப்பைகளை பிரிக்கும் செயல்முறை பணிகளையும், வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பெறும் பணிகளையும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று நேரடியாக மாணவ- மாணவியர்களுக்கு தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைக்குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி மண்டலம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பார்வையிடும் நிகழ்ச்சி, காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் நிலையம் பார்வையிடும் நிகழ்ச்சியில் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 25 மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×