என் மலர்
உள்ளூர் செய்திகள்

டவுனில் உள்ள தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தேங்கிய கழிவு நீரை தூய்மை பணியாளர்கள் சரி செய்த காட்சி.
நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் தூய்மை பணி
- 4 ரத வீதிகளிலும் சாலைகளில் இருந்த மணல் குவியல்கள் வெட்டி எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
- பேட்டையில் தொடங்கி கேடிசி நகர் பாலம் வரையிலும் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் வருகிற 8, 9 மற்றும் 10-ந்தேதிகளில் சாலை தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதிக்கு உட்பட்ட நெல்லை, பாளை, தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது.
இதற்கு முன்னோட்டமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சாலையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 4 ரத வீதிகளிலும் சாலைகளில் இருந்த மணல் குவியல்கள் வெட்டி எடுக்கப்பட்டு பேட்டரி வண்டி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகத்தால் தூசி பறந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்த நிலை மாறியது.
தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அமைந்துள்ள வாறுகாலில் சாக்கடை கழிவு தேங்கி மாவட்ட கல்வி அலுவலகத்திற்குள் செல்லும் நிலை இருந்தது. உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று அடைப்பை சரி செய்தனர். வரும் நாட்களில் பேட்டை பகுதியில் ஆரம்பித்து கேடிசி நகர் பாலம் வரையிலும் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






