search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • மின்கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் குடிநீர் குழாய்கள் உடைந்து 3 மாதங்களாகிறது.

    பொதுமக்கள் சரி செய்ய கோரிக்கை விடுத்த பின்னர் சீரமைப்பு பணி நடந்தது. ஆனாலும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிகிறது.மேலும் அந்த வார்டில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டு வந்தன. இந்த பணியும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அந்த பணியும் இதுவரை முடியவில்லை.

    இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ஏ.ஜி நகர், ஆர்.வி நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் இந்த வார்டில் உள்ளது. இது தொடர்பாக இந்த வார்டின் கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ்காந்தி பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் பணிகள் முடிவடையாமலேயே உள்ளன.

    இந்த நிலையில், 27-வது வார்டு உறுப்பினர் வனிதா சஞ்ஜீவ்காந்தி தலைமையில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் கூறுகையில், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் 27-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் இந்த வார்டுக்கு தேவையான குடிநீர் குழாய், தெரு விளக்குகள் சீரமைப்பது தடை ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் விரைவில் பணிகளை முடித்து தர வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×