என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா ளையம் ஊராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கு ஊராட்சி தலைவராக விமலா(அ .தி.மு.க), துணைத்தலைவராக வினோத்குமார்(திமுக), வார்டு உறுப்பினராக ரதிமனோகர் (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலராக ரவிக்குமார்(தி.மு.க) ஆகியோர் உள்ளனர்.
இதில் 10-வது வார்டுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துதல், குப்பை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் விமலா, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோரை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் புதிதாக சாலை பணி தொடங்க வந்த எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ் இது பற்றி அறிந்ததும் உடனடியாக சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் குப்பை எடுக்க வருபவர்கள் வீட்டுக்கு ரூ.100 கேட்டு வருவதாகவும், 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.
மேலும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அப்புறப்படுத்ததால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. இதற்கு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.இதையடுத்து ஏ. கே செல்வராஜ் எம்.எல்.ஏ., கூறும் போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உரிய அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






