என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு சண்டி ஹோமம்
    X

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு சண்டி ஹோமம்.

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு சண்டி ஹோமம்

    • சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியில் இருந்து உருவான முக்குளங்கள் அமைந்துள்ளது.
    • ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

    காசிக்கு அடுத்தபடியாக விளங்கும் இக்கோவிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியில் இருந்து உருவான முக்குளங்கள் அமைந்துள்ளது.

    இங்கு அகோரமூர்த்தி சுவாமி, புதன் பகவான் தனி சன்னதிகளில் அருள் புரிகின்றனர்.

    கரிகால் சோழன் மன்னராக ஆட்சி பொறுப்பேற்ற போது அவருக்கு முடிசூட்டும் உரிமம் பெற்ற காணியாளர் நாயனார் மரபினர் வழிவழியாக முடி சூட்டி வந்தனர்.

    காணியாளர் நாயனார் தங்களை கரிகால் சோழனிடம் நிரூபிக்கும் வகையில் இக்கோவிலில் உள்ள முக்குளங்களில் தலையில் அகல் விளக்கு வைத்து மூழ்கி விளக்கு அணையாமல் எழுந்திரித்து தங்களை காணியாளர் நாயனார் என நிருபித்தனர்.

    அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை காணியாள நாயனார் மரபினர் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    அதன்படி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணா ஹூதி, மகா தீபாராதனை செய்விக்கப்பட்டது.

    பின்னர் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது.

    இதில் காணியாளர் நாயனார் மரபினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×