என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசு, கேடயம் வழங்கினார்.
கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
- குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத்தில் பவர் டில்லர் எந்திரத்தினையும் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ல் நடைபெற்ற பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்களையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன் பொறுப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்






