என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் குளித்தபோது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது வழக்கு
    X

    குற்றாலத்தில் குளித்தபோது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது வழக்கு

    • போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஐந்தருவியில் மட்டும் 2 கிளைகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    இந்நிலையில் நேற்று அருவியில் குளிப்பதற்காக தென்காசி செங்குந்தர் முதலியார் தெருவை சேர்ந்த வக்கீலான ஷேக் என்ற அயூப்(வயது 38) என்பவர் சென்றுள்ளார்.

    அப்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×