என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  களக்காடு அருகே பெண்ணை தாக்கிய மருமகள் மீது வழக்கு
  X

  களக்காடு அருகே பெண்ணை தாக்கிய மருமகள் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகலிங்கம் மனைவி தங்கமணி. கூலி தொழிலாளி.
  • தங்கமணிக்கும்,அண்ணன் முத்துக்குட்டிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகலிங்கம் மனைவி தங்கமணி (வயது35). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் முத்துக்குட்டிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

  சம்பவத்தன்று தங்கமணி வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த முத்துக்குட்டியின் மகளும், அதே ஊரைச் சேர்ந்த பெரியதுரையின் மனைவியுமான மலர் விழிக்கும், தங்கமணிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரம் அடைந்த மலர்விழி தனது அத்தை தங்கமணியை, அவதூறாக பேசி கன்னத்தில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி தங்கமணி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுசம்பந்தமாக மலர்விழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×