என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான கார்.
திண்டிவனத்தில் ஆம்னிபஸ் மீது கார் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
- வலது பக்கம் திரும்பியபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ்சில் மோதியது.
- 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திண்டிவனம், நவ.20-
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 29). டிரைவர். இவர் சென்னையிலிருந்து நத்தத்திற்கு ஆம்னி பஸ்சில் 50 பயணிகளுடன் திண்டிவனம்- கருணா வூர் பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் பழுதாகி லாரி ஒன்று நின்றி ருந்தது. லாரி மீது மோதாமல் இருக்க வலது பக்கம் திரும்பியபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ்சில் மோதியது. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பஸ் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை அமந்த கரை பகுதியை சேர்ந்த ஆனந்தன், இவரது நண்பர்கள் 3 பேருடன் சென்னையில் இருந்து மதுரைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் 3 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த விபத்தில் 3 ஆம்னி பஸ்களிலும் வந்த பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்தது.






