search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்
    X

    கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்

    • நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
    • தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குசாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்கு சாவடியும் என 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்ப ட்டிருந்தது. வாக்கு ப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்ய ப்பட்டிருந்தது.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 6 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர். 3 வாக்குசாவடிகளிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.

    குருநல்லிபாளையத்தில் நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் அந்த வார்டு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    Next Story
    ×