என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- விடுமுறை நாட்களில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவாடையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்.
- பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டார–வாடை ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜமால்முகமது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமைராபானு (43). மகன் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருவதால் கும்பகோணத்தில் வீடு எடுத்து தங்கி மகனுடன் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவாடையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்.
இந்நிலையில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவா–டைக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து உமைராபானு பாபநாசம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.