என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது எடுத்த படம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம்- யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்
- மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கப்பட்டது.
அதனை முன்னிட்டு ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம், ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவ- மாணவிகளோடு சேர்ந்து உணவு அருந்தி ஒன்றிய சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.
மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறிசாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் மற்றும் துணைத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலர் லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம்லீலா, நாகராஜன், ஆத்தூர் நகரசெயலாளர் முருகானந்தம், விவசாய அணி துணைச் செயலாளர்கள் மாணிக்கவாசகம், கோபி, மாவட்ட பிரதிநிதி கணேசன், வார்டு செயலாளர் கொடிவேல், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முத்து, கமலசெல்வி, கோமதி, அசோக்குமார், பாலசிங், வசந்தி மற்றும் நகரத் துணைச் செயலாளர் செல்வராஜ், ஜேம்ஸ், பிரபாகரன், ஆறுமுகநயினார், பேச்சிராஜா, முருகன், பெரியசாமி உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் லாரன்ஸ் வரவேற்றார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தூர் மணி நன்றி கூறினார்.






