என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசியில் பா.ஜனதாவினர் போராட்டம்
- தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார்.
தென்காசி:
பட்டியல் இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கி வரும் நிதியினை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாலகுருநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில பொதுச் செய லாளர் சிவந்தி நாராயணன், தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், வர்த்தக பிரிவு மாநில செய லாளர் கோதை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






