என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டிக்கும் வகையில் வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.
Next Story