என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் பீளமேடு பயனீர் மில் சாலை
- குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் முடியவே இல்லை
- வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது
பீளமேடு,
கோவை மாநகரின் முக்கிய பகுதியாக பீளமேடு விளங்கி வருகிறது.
இங்கு அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவ னங்கள், ஐ.டி. நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பீளமேடு பகுதியில் இருந்து, காந்திமாநகர், சேரன்மா நகர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலைக்கு ஒரு இணைப்பு சாலை செல்கிறது.
இந்த சாலை பீளமேடு பயனீர் மில் சாலை என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக விளாங்குறிச்சி, சேரன் மாநகர், காந்திமா நகர், பாரதிநகர் பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில், குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன.
குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் நடைபெறாமலேயே உள்ளதால் இந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவிலான குழிகளும் உள்ளது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனேயே வாகனத்தை இயக்கி சென்று வருகின்றனர்.
இருந்த போதிலும் குண்டும், குழியுமான சாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. சிலர் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது. மேலும் மழைக்காலங்க ளில் இந்த ரோட்டில் செல்லவே முடியாது. குழிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால், குழி எங்கு இருக்கிறது என்று தெரியா மல் வாகனத்தை இயக்கி சென்று, குழிக்குள் விழுந்து எழுந்து செல்பவர்க ளையும் காணமுடி கிறது. மேலும் குண்டும், குழியு மான சாலையால் இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரி சலும் ஏற்ப ட்டு வருகிறது.
எனவே இந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிக ளின் கோரிக்கை யாக உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.






