என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

    • ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
    • 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து கன மழையாக கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள பல்வேறு அணைகளும் நிம்பி தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றைய தினம் அணையின் முழு கொள்ளவான 100அடியில் 97அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளும் திறக்கபட்டன.

    நேற்று இரவு முதல் அணையில் இருந்து 12,000கன அடியில் இருந்து 26,000கன அடிவரை பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

    இந்த நிலையில் தற்போது 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் 2-வது நாளாக இன்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாழ்வாக வசிக்கும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×