என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் சப்பரபவனியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் 5 சப்பரங்களின் பவனி
- 2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது.
- நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது. இரவில் 5 சப்பரங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நடந்தது. இந்த 5 சப்பரங்களின் பவனியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர்
குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
நிறைவாக சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜை வைப வங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார்.இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உதவி தலைவர் சுரேஷ், ஓதுவார் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், தங்க மணி, ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






