search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நடத்திய பேச்சு, நடனப்போட்டிகளில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
    X

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

    மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நடத்திய பேச்சு, நடனப்போட்டிகளில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

    • போட்டிகளில் பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி, பராசக்தி வித்யாலயா போன்ற பல பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் அறிவு கோவில் ஆன்மீகக் கல்வி மையம், இலஞ்சியில் வேதாத்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாடல், ஒப்புவித்தல் போட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி, பராசக்தி வித்யாலயா போன்ற பல பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி காளிபிரியா நடன போட்டியில் பங்கேற்று 2-ம் இடமும், மாணவன் கோதண்டராமன் ஒப்புவித்தல் போட்டியில் 3-வது இடமும், பேச்சுப் போட்டியில் 3-வது இடமும் பெற்றார். போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு செங்கோட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    Next Story
    ×