search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம்-ஓமலூர் இடையே, இன்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
    X

    சேலம்-ஓமலூர் இடையே, இன்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

    • சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
    • அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வழி ரெயில் பாதை பாதையாக இருந்தது. இதனை அடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் வரை உள்ள ஏற்கனவே கடந்த 20 வருடமாக கிடப்பில் இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் சுமார் ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அந்த ரெயில் பாதையை ஆய்வு செய்யவும் மேலும் அந்த பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்ட நடத்தவும் திட்டமிடப்பட்டது.

    அதன்படி அந்தப் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று காலை சிறப்பு ரெயிலில் சேலம் வந்தார், இதனை அடுத்து இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.

    அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி. கே .குப்தா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ்,கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர்கள் கவுதமன், அன்பு அரசு,கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்,

    Next Story
    ×