search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 57.79 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
    X

    கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

    நெல்லை மாவட்டத்தில் 57.79 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

    • இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது எனவும் விவசாயிகள் கூறினர்.

    நெல்லை:

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்குவாரி

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினர். இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    மானூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சில குளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றனர்.

    தரம் குறைந்த விதைகள்

    பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் பேசிய தாவது:-

    நெல்லை மாவட்ட அணைகளில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் 62.10 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இம்மாதம் இயல்பான மழை அளவை விட 48.32 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 265 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் 1,546 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளது.

    இதில் 39 விதைகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் அந்த விதை விற்பனை யாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், 2 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    சுமார் 57.79 மெட்ரிக் டன் எடையுள்ள தரம் குறைந்த விதைகள் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.77 லட்சத்து 36 ஆயிரம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×