என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து குதித்து வங்கி அதிகாரி மனைவி தற்கொலை
    X

    அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து குதித்து வங்கி அதிகாரி மனைவி தற்கொலை

    • பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர்.
    • மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வருபவர் பங்கஜ்குமார். இவர் எஸ்.பி.ஐ வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சரி (வயது46) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர், பீகார் மாநிலம் பாட்னா ஆகும்.

    நேற்று இரவு பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பங்கஜ் குமார் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மனைவி மஞ்சரி மாயமாகி இருந்தார். அவரை பங்கஜ்குமார் தேடிவந்தார்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பின் கீழே மஞ்சரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு குடியிருப்பின் காவலாளி ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் பங்கஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து பார்த்தபோது மனைவி மஞ்சரி பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மஞ்சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சரி, வீட்டின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 10-வது மாடியில் இருந்து விழுந்து இறந்து உள்ளார்.

    இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மஞ்சரியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து அவரது கணவர் பங்கஜ்குமாரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் பங்கஜ்குமார் பாட்னாவில் இருந்து பணியிடம் மாறுதல் பெற்று சென்னைக்கு குடி வந்து உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×