என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு நடைபயண பேரணி
    X

    விழிப்புணர்வு நடைபயண பேரணியை மருத்துவர் பாரதிதாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு நடைபயண பேரணி

    • பேரணி மேம்பாலத்தில் தொடங்கி சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
    • உடல் ஆரோக்கியம், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி மேம்பாலத்திலிருந்து சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.

    இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் கொடியசைத்து நடைபயண பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நடை பயண பேரணியில் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு அமைப்பு தலைவர்கள், மருத்துவர்கள், தன்னார்வர்கள், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தனியார் மருத்துவமனை, முதுநிலை வணிக குழுவினரும், மருத்துவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×