search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நெல்லையில் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நெல்லையில் விழிப்புணர்வு பேரணி

    • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை.
    • விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்கத்தின் சார்பாக முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்களை அரசு பள்ளிகள் சேர்த்து படிக்கும் வகையில் இல்லம் தேடி சென்று பெற்றோர்களை சந்தித்தல் மற்றும் அரசு பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சி மூலம் 5 வயதுக்கு மேற்பட்ட 5521 குழந்தைகளும், ஆறாம் வகுப்பிற்கு 4564 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பிற்கு 5651 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பிற்கு 6193 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்து பயன் அடைவார்கள்.

    இந்த விழிப்புணர்வு மூலம் பொதுமக்களை சந்தித்து அரசு பள்ளியில் மாணவர்கள் படித்தால் வரக்கூடிய இலவச கல்வி, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்கள் எவ்வாறு தங்களது தனித் திறமையை வளர்க்க வேண்டும். நுழைவு தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்தும் விளக்கப்படும்.

    இந்த விழிப்புணர்வு வாகன பேரணி வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு நின்று செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×