search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி  திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
    X

    விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    • மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
    • பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கட்டிமேடு ஊராட்சி இணைந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் பெறுவது எவ்வாறு என விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் விழிப்புணர்வு நடைப்பயணம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி இரவிச்சந்திரன் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைசாமி கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் ரவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உழவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    வேளாண்மை உதவி பொறியாளர் கௌசல்யா பேசும்போது,கிராம அளவில் வேளாண்மை வாடகை இயந்திரங்கள் வாடகை சேவை மையங்களில் மானியத்தில், அமைப்பது வேளாண்மை இயந்திரங்கள் வாடகை முன் பதிவிற்கு இ-வாடகைக்கு திட்டம் அமைப்பது பற்றி விரிவாக பேசினார் .

    உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் வீட்டில் பின்புறம், மாடித்தோட்டம் பழ வகை மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் வேளாண்மை உதவி ஆலுவலர்கள் ரமேஷ், சுவாமிநாதன் மற்றும் விவசாயி சங்க தலைவர் அப்துல் ரஹ்மான் செயலர் செந்தில்குமார், தீவிர விவசாயிகள் முகமது மஸ்கின், ஹலீல் ரஹ்மான்,அப்துல் சலீம் ,அப்துல் சலாம் , அப்துல் முனாப் ஆசிரியர் சாகுல் ஹமீது கல்வியாளர் ரவிச்சந்திரன் , தண்டபாணி ஊராட்சி உறுப்பினர்கள் இளம் விவசாயி பகுருதீன் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் உழவு மெசின், பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் விழிப்புணர்வு பிரச்சார நடைபெறும் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் செயலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×