search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ள விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர் ஊர்வலத்தை அருள் எம்.எல்.ஏ தொடங்கி வைத்த காட்சி. அருகில் மண்டலத் தலைவர் உமாராணி. இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு மற்றும் பலர் உள்ளனர்.

    குப்பை இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ள விழிப்புணர்வு ஊர்வலம்

    • குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும்,
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.

    சேலம்:

    சேலம், ஏற்காடு அடிவாரத்திலிருந்து ஏற்காடு செல்லும் பகுதியில் உள்ளது கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி.

    இந்த ஊராட்சியை குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும், வீதிகளிலும், பொது இடங்களிலும் குப்பை என்பதே இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அருள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் ஆ.பிரபு, கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தாளாளர் மீனா சேது, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜா, ஆறுமுகம், ஜி.கே.மணி, செட்டிசாவடி கோவிந்தராஜ், பூவரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×