என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தபடம்.
கோவில்பட்டியில் போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
- மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டி இனிப்பு வழங்கினார்.
- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி இனிப்பு வழங்கினார். தொடர்ந்துஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கார் ஓட்டும் டிரைவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கார்களை ஓட்ட வேண்டும். சிக்னல்களில் நின்று பார்த்து செல்ல வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. இருசக்கர வாகனங்களில் 2 பேர்களுக்கு மேல் செல்லக்கூடாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, சிவக்குமார், ரமேஷ், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






