search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 17-ந் தேதி ஆவணித்திருவிழா தொடக்கம்-கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கம்
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 17-ந் தேதி ஆவணித்திருவிழா தொடக்கம்-கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கம்

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது
    • ஆவணி திருவிழா முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, தங்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது

    ஆலோசனை கூட்டம்

    இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் நடைபெற்றது.

    கோவில் இணை ஆணையர் கார்த்திக், போலீஸ் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கமிஷனர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    400 போலீசார்

    கூட்டத்தில் திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் பக்தர்களுக்கு விநியோகம் செய்வது நகரில் 8 இடங்களில் நகராட்சி சார்பில் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    விழா நாட்களில் 120 தூய்மைப் பணியாளர்கள் முறையே 3 ஷிப்ட் முறையில் சுழற்சி முறையில் பணியாற்றுவது, பக்தர்களின் பாதுகாப்பிற்கு 400 போலீசாரை பணியில் ஈடுபடுத்த கேட்டு கொள்ளப்பட்டது.

    ஆவணி திருவிழா முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, தங்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தாசில்தார் சுவாமிநாதன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய் (பொறுப்பு) மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அம்பிகாபதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×