என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி பலி
- திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் பகுதியில் வந்தபோது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது.
- கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மாடு மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவள்ளூர்:
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி மேரி சைலா (45) மற்றும் மகள் ரூத் (13) ஆகியோருடன் தனக்கு சொந்தமான ஆட்டோவில் திருவாலங்காடு சென்று விட்டு நேற்று மாலை திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் பகுதியில் வந்தபோது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மாடு மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரூத் பலியானார். அவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 45). இவர் கடந்த 26-ந் தேதி பொங்கலுக்கு புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்றார்.
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை யோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






